சாலை மற்றும் மேம்பாலத் திட்டங்களுக்கு ஆயிரத்து 230 கோடி ரூபாய் நிதிஒதுக்கீடு. அனைவருக்கும் கல்வி வழங்கும் திட்டத்திற்கு 125 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தகவல்

161

தமிழக அரசு இன்று தாக்கல் செய்த 2016-17 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் சாலை மற்றும் மேம்பாலத் திட்டங்களுக்கு ஆயிரத்து 230 கோடி ரூபாய் நிதிஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கப்பட்ட நிதி குறித்து அறிவித்தார். அதன்படி, சமூக நலத்துறைக்கு 4 ஆயிரத்து 512 கோடி ரூபாய் நிதியும், பள்ளிக் கல்வித் துறைக்கு 24 ஆயிரத்து 130 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கட்டடங்களை மேம்படுத்த முன்னூற்று 30 கோடி ரூபாயும், அனைவருக்கும் கல்வி வழங்க 125 கோடி ரூபாயும், வனத்துறைக்கு 652 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துத்துறைக்கு ஆயிரத்து 295 நிதியும், தீயணைப்புத்துறைக்கு 230 கோடி ரூபாயும், கால்நடைத்துறைக்கு ஆயிரத்து 188 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.