பி.எஸ்.4 வாகனங்களை 2020 ஜூன் மாதத்திற்கு பிறகு பதிவு செய்ய முடியாது-மத்திய அரசு!

438

பி.எஸ்-4 வாகனங்களை 2020ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு பிறகு பதிவு செய்ய தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
வாகனப் புகையால் ஏற்படும் மாசுவைக் கட்டுப்படுத்துவதற்காக, பி.எஸ் 4 தரத்தில் இருந்து நேரடியாக, பி.எஸ் 6 தரத்துக்கு மாறுவற்கு மத்திய அரசு கடந்த ஆண்டு முடிவு செய்தது. இதற்காக புதிய வரைவுக் கொள்கை ஒன்றை மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சகம் உருவாக்கியுள்ளது. அதில் 2020ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதிக்கு முன் தயாரிக்கப்பட்ட பி.எஸ்.4 வாகனங்களை, ஜூன் 30ஆம் தேதிக்குப் பிறகுப் பதிவு செய்ய முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் தங்களின் கருத்துகளை வரும் 20ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.