சட்டவிரோத தொலைபேசி முறைகேடு வழக்கு : மாறன் சகோதரர்கள் உள்பட 7 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு

181

சட்ட விரோத தொலை பேசி முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்கள் உள்பட 7 பேர் மீதும் சிபிஐ நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டன.

சட்டவிரோதமாக பிஎஸ்என்எல் இணைப்புகளை பயன்படுத்தி, அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் மாறன் சகோதரர்கள் உள்ளிட்டோரை விடுவித்து சிபிஐ நீதிமன்றம் கடந்த மார்ச் 14-ஆம் தேதி உத்தரவிட்டது. இதற்கு எதிராக சிபிஐ தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மாறன் சகோதரர்களை விடுவித்த நீதிமன்ற உத்தரவுக்கு தடைவிதித்தும், வழக்கை மீண்டும் விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் மாறன் சகோதரர்கள் உள்பட 7 பேர் மீதும் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. குற்றச்சாட்டு பதிந்த பின் வழக்கு விசாரணை செப்டம்பர் 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.