காட்டுத்தீயால் ஏராளமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்..!

389

கனடாவில் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அடுத்து, ஏராளமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கனடாவில், பிரிட்டீஸ் கொலம்பியா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. இதனால் ஏராளமான விவசாய நிலங்கள், வனப்பகுதிகள் தீக்கிரையாகி உள்ளன. மேலும் காட்டுத்தீ குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் பரவி வருவதால், அப்பகுதியில் இருந்து சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். காட்டுத்தீயினால் அப்பகுதி முழுவதும் மஞ்சள் நிறமாக காணப்படுகிறது. இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.