பிரிட்டனில் மருத்துவமனைகளை நிர்வகிக்கும் குழுவின் இணையதளம் சைபர் தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் தீவிரவாதிகளின் சதிச் செயல் காரணமா என பாதுகாப்புத்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

317

பிரிட்டனில் மருத்துவமனைகளை நிர்வகிக்கும் குழுவின் இணையதளம் சைபர் தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் தீவிரவாதிகளின் சதிச் செயல் காரணமா என பாதுகாப்புத்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
பிரிட்டனில் பெரும்பாலான பகுதியில் தகவல் தொழில்நுட்பம் செயலிழந்தது. இதன் காரணமாக பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன. மத்திய லண்டன் மருத்துவமனைகளை நிர்வகிக்கும் சுகாதாரக் குழுமத்தின் இணையதளம் சைபர் தாக்குதலால் முடங்கியுள்ளது. இதனால், தேசிய சுகாதார சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. லண்டன், பிளாக்பர்ன், நாட்டிங்காம்,உள்ளிட்ட பகுதிகளில் மருத்துவமனைகள் பாதிப்புக்கு உள்ளாகின. கம்ப்பூட்டரை ஆன் செய்தால், ‘பிணைத் தொகை கொடுத்தால்தான் உங்களின் கம்ப்யூட்டர்கள் செயல்படும்’ என திரையில் தோன்றுவதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே இது தீவிரவாதிகளின் சதிச் செயலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து தொழில்நுட்ப வல்லுநர்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.