கனமழையால் அந்தேரி ரெயில் நிலையம் அருகே உள்ள பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது..!

235

மும்பையில் தொடரும் கனமழையால் அந்தேரி ரெயில் நிலையம் அருகே உள்ள பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

வடகிழக்கு மாநிலங்களில் வெளுத்து வாங்கும் கனமழையால், பல்வேறு இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மகாராஷ்ரா மாநிலம் மும்பையில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இன்று காலை மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசாக துவங்கிய மழை 8 மணிக்கு மேல் கனமழையாக மாறியது. பாரல் தாதர் பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்தேரி ரயில் நிலையம் அருகே கோகலே பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்துள்ளது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிப்படைந்துள்ளது. இடிபாடுகளை சரி செய்யும் பணியில் மும்பை தீயணைப்பு வீரர்களை ஈடுபட்டு வருகின்றனர்.