ஐந்து நாடுகள் பங்கேற்கும் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று சீனா செல்கிறார்!

411

ஐந்து நாடுகள் பங்கேற்கும் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று சீனா செல்கிறார்.
பிரிக்ஸ் அமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. பொருளாதாரம், தீவிரவாதம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்காக ஆண்டுதோறும் பிரிக்ஸ் நாடுகளின் சார்பில் மாநாடு நடத்தப்படுகிறது. இந்நிலையில், ஒன்பதாவது பிரிக்ஸ் மாநாடு சீனாவின் ஜியாமென் நகரில் இன்று தொடங்குகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று சீனா செல்கிறார். அப்போது, இந்திய, சீனா எல்லை பிரச்சனை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து சீன அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துவார் என தகவல் வெளியாகியுள்ளது. மூன்று நாட்கள் சீன பயணத்தை முடித்துக்கொண்டு மியான்மர் நாட்டுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார். இதில், இருநாடுகளுக்கிடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.