பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியா-ரஷ்யாவிற்கு இடையே 18 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

228

பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியா-ரஷ்யாவிற்கு இடையே 18 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.
கோவாவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நாளை இந்தியா வரவுள்ளார். மேலும் 17வது இந்தியா – ரஷ்யா வருடாந்திர கூட்டத்திலும் அவர் கலந்து கொள்கிறார். இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியும், விளாடிமிர் புடினும் சந்தித்து, 18 முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகின்றனர். அதில் 39 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் ரஷ்யாவின் எஸ்-400 ரக அதிநவீன ஏவுகணை, போர் கருவிகள், டிரோன்கள் ஆகியவற்றை வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. மேலும் இந்தியா – ரஷ்யா இணைந்து புதிய ரக ஹெலிகாப்டர்கள் தயாரிப்பதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாக உள்ளது.