பிரிக்ஸ் மாநாட்டை சீர்குலைக்க பாகிஸ்தான் தீவிரவாதிகள் சதித்திட்டம்…

247

பிரிக்ஸ் மாநாட்டை சீர்குலைக்க பாகிஸ்தான் தீவிரவாதிகள் சதித்திட்டம்…….
உளவுத்துறை எச்சரிக்கையால் கோவாவில் பாதுகாப்பு அதிகரிப்பு

பிரிக்ஸ் மாநாட்டில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதையடுத்து கோவாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கோவாவில் வரும் 15, 16 ஆகிய தேதிகளில் பிரிக்ஸ் கூட்டமைப்பின் மாநாடு நடைபெற உள்ளது. இந்த கூட்டமைப்பில் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ரஷ்யா, சீனா அதிபர்கள் நாளை இந்தியா வர உள்ளனர். இந்நிலையில், பிரிக்ஸ் மாநாட்டை சீர்குலைக்கும் முயற்சியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஈடுபட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்த இந்திய ராணுவம் தீவிரவாதிகள் முகாம்கள் நடத்திய தாக்குதலில் 30க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் உயிரிழந்தனர்.

இதற்கு, பழிக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக பாகிஸ்தானிலிருந்து செயல்படும் தீவிரவாதிகள், கோவா பிரிக்ஸ் மாநாட்டில் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இந்தியாவுக்குள் புகுந்து தாக்குதல் நடத்த 250 தீவிரவாதிகள் காஷ்மீர் எல்லையில் காத்திருப்பதாகவும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.