பிரேசிலில் கன மழை மற்றும் சூறாவளியில் சிக்கி முக்கிய நகரங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

184

பிரேசிலில் கன மழை மற்றும் சூறாவளியில் சிக்கி முக்கிய நகரங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
தெற்கு பிரேசிலில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. மழையுடன் கடுமையாக வீசிய சூறாவளிக் காற்று, கட்டிடங்களை சேதப்படுத்தியதால், நகரம் முழுவதும் குப்பை கூளங்களாக மாறியுள்ளன. ஏராளமான வாகனங்கள் தூக்கி எறியப்பட்டு சாலைகளில் சிதறிக் கிடக்கின்றன. முக்கிய நகரங்கள் வெள்ளத்தில் மிதப்பதால், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். இதனால் அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீட்பு மற்றும் நிவாரண பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.