பிரேசில் அதிபராக பதவியேற்றுள்ள மைக்கல் டெமருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

195

பிரேசில் அதிபராக பதவியேற்றுள்ள மைக்கல் டெமருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரேசில் அதிபராக இருந்த தொழிலாளர் கட்சியை சேர்ந்த தில்மா ரூசெப், நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தி காட்டி மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து அவருக்கு எதிராக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டதையடுத்து, அதிபர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். துணை குடியரசுத் தலைவராக இருந்த மைக்கேல் டெமர் அதிபராக பதவியேற்றுக் கொண்டார். இந்தநிலையில் மைக்கேல் டெமரின் சதி திட்டத்தால் ரூசெப் நீக்கப்பட்டதாக கூறி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டெமருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியும், அவருக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும் பொதுமக்கள் ஊர்வலமாக சென்றனர். இதனால் நகரின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.