பிரேசில் நாட்டில், ஒலிம்பிக் போட்டிகளின் போது தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்த மேலும் ஒரு தீவிரவாதியை போலீசார் கைது செய்தனர்.

259

பிரேசில் நாட்டில், ஒலிம்பிக் போட்டிகளின் போது தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்த மேலும் ஒரு தீவிரவாதியை போலீசார் கைது செய்தனர்.

பிரேசிலில் ரியோ-டி-ஜெனிரோ நகரில், ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி தொடங்கி 21- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை அந்நாட்டு அரசு செய்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒலிம்பிக் போட்டிகளின் போது தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்த, ஐ.எஸ்.தீவிரவாதிகள் 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், சந்தேகத்தின் அடிப்படையில் மேலும் ஒருவரை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். ஆப்கான் உள்ளிட்ட நாடுகளின் பொது இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டு வருவதால் பிரேசிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படும் இடங்களில் 85 ஆயிரம் போலீசார் மற்றும் அந்நாட்டு ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட உள்ளனர்.