இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சமி மீது வழக்குப்பதிவு!

117

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சமி மீது வரதட்சணை கொடுமை மற்றும் பாலியல் வன்கொடுமை பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி கொல்கத்தாவை சேர்ந்தவர். இவரது மனைவி ஹாசின் ஜகான் கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதில் சமி பல பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு தன்னை அடித்துத் துன்புறுத்துவதாகவும், வரதட்சணை கேட்டு கொடுமை படுத்துவதாகவும் குற்றஞ்சாட்டி இருந்தார். இதே போல் சமி தாய் உள்பட அவரது குடும்ப உறுப்பினர்கள் 4 பேர் மீது புகார் கூறியிருந்தார். இந்நிலையில் வரதட்சணை கொடுமை மற்றும் பாலியல் வன்கொடுமை பிரிவுகளின் கீழ் முகமது சமி மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என கொல்கத்தா போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.