எல்லைப் பிரச்சினையால் ஜி-20 உச்சி மாநாட்டில் ஜின்பிங் – மோடி சந்தித்து பேசுவதற்கான வாய்ப்பு இல்லை என்று…

273

எல்லைப் பிரச்சினையால் ஜி-20 உச்சி மாநாட்டில் ஜின்பிங் – மோடி சந்தித்து பேசுவதற்கான வாய்ப்பு இல்லை என்று சீனா தெரிவித்துள்ளது.
சிக்கிம் பகுதியில் சீன ராணுவம் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டதை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியதால் இருநாடுகளிடையே பதட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்தநிலையில், ஜி-20 உச்சிமாநாடு ஜெர்மனியில் நாளை தொடங்கி 2 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் கலந்து கொள்கின்றனர். அப்போது, இரு தலைவர்களும் சந்தித்து பேச வாய்ப்பில்லை என்று சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருநாட்டு உறவில் இணக்கமான சூழல் இல்லாததால், மோடியும், ஜின்பிங்கும் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையில் ஈடுபட மாட்டார்கள் என்று அவர்கள் கூறியுள்ளனர்.