உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்த தாய்லாந்து மன்னர் பூமிபால் உடல் ஒராண்டுக்கு பிறகு தகனம் செய்யப்பட்டது…!

420

உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்த தாய்லாந்து மன்னர் பூமிபால் உடல் ஒராண்டுக்கு பிறகு தகனம் செய்யப்பட்டது.
தாய்லாந்து நாட்டில் மன்னராக இருந்தவர், பூமிபால் அதுல்யதேஜ். 88 வயதான நிலையில் உடல் நலக்குறைவால், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 13ஆம் தேதி மரணம் அடைந்தார். மன்னர் மறைவுக்கு ஓராண்டு காலம் துக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், மன்னரின் உடல் புத்தமத வழக்கப்படி
தகனம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. அரண்மனையில் கடந்த 5 நாட்களாக புத்த மத வழக்கப்படி இறுதிச்சடங்கு நடைபெற்று வந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் மன்னரின் உடல், தகன மையத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகளில் மன்னரின் குடும்பத்தினருடன், 40 நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். புத்த மத வழக்கப்படி மன்னர் உடலுக்கு அவரது மகனும், புதிய மன்னருமான வஜிரலோங்கோன் தீ மூட்டினார். அவருக்கு லட்சக்கணக்கான மக்கள் கண்ணீருடன் பிரியாவிடை கொடுத்தனர்.