பாம்பன் மீனவர்கள் 4 பேர் சிறைப்பிடிப்பு | ஒரு படகையும் பறிமுதல் செய்து இலங்கை கடற்படை அட்டூழியம்..!

220

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த பாம்பன் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ள சம்பவம் மீனவ மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்வது தொடர்கதையாக உள்ளது. இந்தநிலையில், ராமேஸ்வரம் பாம்பன் பகுதியை சேர்ந்த அருள்பிரகாஷ் என்பவரின் படகில் மீனவர்கள் 4 பேர் நேற்று கடலுக்கு மீன் பிடிக்கச்சென்றனர். நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் ரீகன், எமர்சன், மாரியப்பன் உள்ளிட்ட 4 மீனவர்களை கைதுசெய்தனர். மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், மீன்பிடிக்க பயன்படுத்திய ஒரு படகையும் அவர்கள் சிறைபிடித்துச் சென்றனர். கைதுசெய்யப்பட்ட மீனவர்களை தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச்சென்று இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ள சம்பவம் மீனவ மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கைதுசெய்யப்பட்ட 4 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.