பாலிவுட் நடிகர்கள், விளையாட்டு வீரர்களுக்கு இடையே கால்பந்து போட்டி,ஆட்டநாயகன் விருது பெற்ற தோனி!

401

பாலிவுட் நடிகர்கள், விளையாட்டு வீரர்களுக்கு இடையே நடைபெற்ற கால்பந்து போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி 2 கோல்களை அடித்து அனைவரையும் கவர்ந்தார்.
தொண்டு நிறுவனங்களுக்கு நிதி திரட்டும் வகையில் இந்திய விளையாட்டு வீரர்கள், பாலிவுட் திரை நட்சத்திரங்களுக்கு இடையிலான கால்பந்து போட்டி மும்பையில் நடைப்பெற்றது. இப்போட்டியில் கோலி தலைமையிலான அணி 7-2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டி தொடங்கிய 5-வது நிமிடத்தில், தோனி கோல் அடித்து அசத்தினார். அதனை தொடர்ந்து 39-வது நிமிடத்தில் பெனால்டி கிக் மூலமாக இரண்டாவது கோலை விளாசிய தோனி ஆட்ட நாயகன் விருதை தட்டிச்சென்றார். கிரிக்கெட் விளையாடுவதற்கு முன்பாக தோனி தனது சிறுவயதில் கால்பந்து விளையாடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.