பொலிவியா நாட்டில் 14 ஆயிரம் கஞ்சா செடிகள் தீ வைத்து எரிப்பு | போதைப்பொருள் ஒழிப்பு அதிகாரிகள் நடவடிக்கை.

112

பொலிவியா நாட்டில் தடையை மீறி பயிரிடப்பட்டிருந்த 14 ஆயிரம் கஞ்சா செடிகள் தீ வைத்து எரித்து அழிக்கப்பட்டன.
சமீப காலமாக பொலிவியா நாட்டில் போதைப்பொருட்களின் புழக்கம் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அங்குள்ள 5 ஏக்கர் பரப்பிலான விளைநிலத்தில் தடையை மீறி பயிரிடப்பட்டிருந்த சுமார் 14 ஆயிரம் கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போதைப்பொருள் ஒழிப்பு அதிகாரிகள், அந்நாட்டு பாதுகாப்பு படை வீரர்களின் உதவியுடன், கஞ்சா செடிகளை வெட்டி எடுத்து தீயிட்டு கொளுத்தினர். மேலும் போதைப்பொருள் ஒழிப்பிற்கு உலக நாடுகள் ஒத்துழைப்பு வழங்குமாறு அந்நாட்டு அதிபர் ஈவோ மொராலஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.