சென்னையில் 24 மணி நேரமும் காற்றுத் தரம் கண்காணிக்கப்படும் – தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்

96

போகி பண்டிகையின்போது, சென்னையில் 24 மணி நேரமும் காற்றுத் தரம் கண்காணிக்கப்படும் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

பொங்கல் விழாவுக்கு முன்பாக வரும் போகி பண்டிகை, வருகிற 14-ம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம், வீட்டில் உள்ள பழைய பொருட்களான பாய், துணிமணிகள் உள்ளிட்டவைகளோடு, பிளாஸ்டிக், ரப்பர் பொருட்கள், டயர், டியூப் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுகிறது. எனவே இதனை தடுக்கும் விதமாக சென்னை மாநகரம் முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில், விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை, அந்த வாரியத்தின் தலைவர் ஷாம்பு கலோரிகள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், போகி பண்டிகையின் போது, 15 இடங்களில் காற்று தரத்தினை 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு, பின்னர் காற்று மாதிரி சேகரிப்பு ஆய்வுக்கு அனுப்பப்படும் என்றார். மேலும், அத்துமீறி காற்று மாசு ஏற்படுத்துவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கலோரிகள் எச்சரித்தார்.