உடம்பில் டாட்டூ குத்தியவர்கள் விமானப்படை பணியில் சேர முடியாது-டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தவு!

295

உடம்பில் டாட்டூ குத்தியவர்கள் விமானப்படை பணியில் சேர முடியாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தவு பிறப்பித்துள்ளது.
விமானப் படையில் வேலையில் சேருவதற்காக ஒருவர் தேர்வு எழுதினார். மருத்துவப் பரிசோதனை முடிந்து பணியில் சேரும்போது, அவரது உடலில் நிரந்தரமான டாட்டூ எனப்படும் பச்சை குத்தியிருந்ததால், பணி நியமனம் ரத்து செய்யப்பட்டது. இதனை எதிர்த்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இதை விசாரித்த உயர் நீதிமன்றம், விமானப் படையின் உத்தரவு செல்லும் என்று தீர்ப்பளித்தார். வேலைக்கான விளம்பரத்தில் டாட்டூ வரைந்திருந்தால், வேலை கிடையாது என கூறப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய நீதிமன்றம், வேலை நியமனத்தை ரத்து செய்தது செல்லுபடியாகும் என பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. பழங்குடியினருக்கு மட்டும் டாட்டூ குத்துவதற்கு சில விதிவிலக்குகளை விமானப்படை வகுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.