போடி அருகே தேர்தல் தொடர்பாக ஏற்பட்ட மோதலில் தனியார் நிறுவன ஊழியர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

151

போடி அருகே தேர்தல் தொடர்பாக ஏற்பட்ட மோதலில் தனியார் நிறுவன ஊழியர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தேனி மாவட்டம் போடி அருகே எரணம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட 7-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு லட்சுமி என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இவரை ஒருமனதாக தேர்வு செய்ய கிராமத்தினர் முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதே பதவிக்கு ராஜகோபால் என்பவரும் மனு தாக்கல் செய்துள்ளார். லட்சுமி தரப்பினருக்கும், ராஜகோபால் தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, பின் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மோதலில் பிரகாஷ் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த ரங்கசாமி தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து. விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.