மஹாராஷ்டிரா தஹானு பகுதியில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், பள்ளி மாணவர்கள் 4பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்..!

496

மஹாராஷ்டிரா தஹானு பகுதியில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், பள்ளி மாணவர்கள் 4பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மஹாராஷ்டிராவின் பல்கர் மாவட்டத்தில் உள்ள தஹானு என்ற பகுதியில் இருந்து பள்ளி மாணவர்கள் 40 பேருடன் கடலுக்குள் படகு ஒன்று சென்றது. 2 நாட்டிக்கல் மைல் தொலைவில் சென்று கொண்டிருந்தபோது, அந்த படகு திடீரென கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த கடலோரக் காவல் படையினர் மற்றும் மீட்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.இந்த விபத்தில் மாணவர்கள் 4பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 25 மாணவர்கள் மீட்கப்பட்டனர். தகவலறிந்து கடற்கரையில் ஏராளமானோர் குவிந்துள்ளனர். கடலில் பயணித்த மாணவர்கள் அனைவருக்கும் பாதுகாப்புக் கவசம் அணிவிக்கப்பட்டிருந்ததா? என்பது குறித்து விவரங்கள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.