தொடரும் ப்ளூ வேல் தற்கொலைகள் மனோஜ் என்ற மாணவர் தூக்கிட்டு தற்கொலை!

1154

கேரளாவில் மனோஜ் என்ற மாணவர் ப்ளூ வேல் ஆன்லைன் கேமினால் தற்கொலை செய்து கொண்டதாக அவரது தாயார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகில் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் உயிரை பலி வாங்கிய ப்ளு வேல் ஆன்லைன் கேமினால் தற்போது இந்தியாவிலும் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் 16 வயது இளைஞர் மனோஜ் ப்ளூ வேல் விளையாட்டினால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மனோஜின் தாயார், ப்ளூ வேல் கேம் விளையாட தொடங்கிய கடந்த 9 மாதங்களாக மனோஜின் சுடுகாடு, கடற்கரை ஆகிய பகுதிகளுக்கு இரவு நேரங்களில் சென்று வந்ததாகவும், கடந்த சில நாட்களுக்கு முன்பாக தனது கைகளை கிழித்துக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.