கள்ளக்குறிச்சி அருகே ப்ளூவேல் விளையாடிய 28 வயது இளைஞர் மருத்துவமனையில் அனுமதி..!

505

கள்ளக்குறிச்சி அருகே ப்ளூவேல் விளையாடிய 28 வயது இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை அடுத்துள்ள பழையபாலபட்டு கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகன் சங்கர் கடந்த சில நாட்களாக ப்ளூவேல் கேம் விளையாடியுள்ளார். இதனை அவரது குடும்பத்தினர் கவனிக்காமல் இருந்து வந்தனர். இந்த நிலையில் சமீப காலமாக சங்கரின் உடல்நலமும் மனநலமும் பாதிக்கப்பட்டதை கண்டு சந்தேகமடைந்த உறவினர்கள் அவரிடம் விசாரித்தனர். அப்போது சங்கர் ப்ளூவேல் கேம் விளையாடியது தெரியவந்ததை அடுத்து அவர், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு உடல்நல சிகிச்சையும் மனநல ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. ப்ளூவேல் விளையாட்டை 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களால் மட்டுமே விளையாட முடியும் என கூறப்பட்டு வந்த நிலையில், 28 வயதான சங்கர் என்ற இளைஞர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.