புளூவேல் விளையாட்டு குறித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தானாக முன்வந்து விசாரணை..!

389

புளூவேல் விளையாட்டைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
புளூவேல் விளையாட்டால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது.
புளூவேல் விளையாட்டை பதிவிறக்கம் செய்பவர்கள், பகிர்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்த நீதிமன்றம், ஷேர்இட் போன்ற ஊடகங்கள் மூலம் பகிரவும், மற்றும் பதிவிறக்கம் செய்ய உதவுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. இந்த விளையாட்டினை தடை செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று தெரிவித்த நீதிமன்றம், புளூ வேல் விளையாட்டு பரவாமல் தடுக்க கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இந்த விளையாட்டு தொடர்பாக பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்த குழு அமைக்க வேண்டும் என்றும், தடை செய்ய எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து மத்திய, மாநில அரசுகள் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.