சர்ச்சைக்குரிய இணையதளங்கள் முடக்கம்..!

361

சர்ச்சைக்குரியதாக பரிந்துரைக்கப்பட்ட இணையதளங்களில் 75 சதவீதம் முடக்கப்பட்டிருப்பதாக மத்திய அமைச்சர் கங்காராம் ஆஹிர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மக்களவையில் எழுத்துப்பூர்வமாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர், 2 ஆயிரத்து 245 இணையதளங்களை முடக்கம் செய்யுமாறு முகநூல், டுவிட்டர், யூடியுப் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டதாக கூறினார். இதில் ஆயிரத்து 662 இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக சுட்டிக் காட்டிய மத்திய அமைச்சர், முகநூல் நிறுவனம் 89 சதவீத பரிந்துரைகளை ஏற்று சிறப்பாக செயல்பட்டதாக தெரிவித்தார். இந்த இணையதளங்கள் அனைத்தும் தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 69ஏ-ன் கீழ் முடக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.