கருப்புப் பண விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து தகவல் தெரிவிக்க மத்திய அரசு புதிய காலக்கெடுவினை அறிவித்துள்ளது.

241

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வருவாய் துறை செயலாளர் ஹஷ்முக் ஆதியா, கணக்கில் வராத வருமானத்தை தாமாக முன்வந்து மார்ச் 31ம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்று கூறினார். கணக்கில் வராத வருமானத்திற்கு 50 சதவீத அபராதம் விதிக்கப்படும் என்றும், தகவல் தெரிவிக்கப்படும் நபரின் பெயர் ரகசியமாக வைக்கப்படும் எனவும் அவர் உறுதி அளித்தார்.

இன்று முதல் கணக்கில் வராத வருமானத்தை வெளிப்படுத்த வாய்ப்பு வழங்கப்படும் என்று குறிப்பிட்ட ஆதியா, காரிப் கல்யாண் யோஜனா திட்டத்தில் மக்கள் இணைய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இந்த திட்டம் மூலம் கிடைக்கும் பணம் ஏழை மக்களின் நல்வாழ்வுக்காக செலவு செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.