ஐதராபாத் இரட்டை குண்டுவெடிப்பு வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 4 ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஐதராபாத்தில் கடந்த 2007-ம் ஆண்டு ஆகஸ்டு 25-ம் தேதி லும்பினி பார்க் மற்றும் கோகுல்சாட் ஆகிய இரண்டு இடங்களில் குண்டு வெடிப்பு நடந்தன. இதில் அப்பாவி மக்கள் 42 பேர் பலியாகினர். மேலும், 50க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த குண்டு வெடிப்புக்கு காரணமான இந்தியன் முஜாகிதின் அமைப்பை சேர்ந்த 4 பேரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு தேசிய புலனாய்வு ஏஜென்சி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு தொடர்பாக இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் வழக்கில் இன்று  தீர்ப்பு வழங்கப்படப்போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.ஆனால் தீர்ப்பு செப்டம்பர் 4 ந்தேதிக்கு  தள்ளிவைக்கபட்டுள்ளது.