பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷாவின் தமிழக பயணம் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

165

பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷாவின் தமிழக பயணம் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அமித் ஷாவின் வருகைக்கான ஏற்பாட்டு பணிகள் குறித்து ஆலோசனை செய்வதற்காக கோவை வந்ததாக தெரிவித்தார். இந்நிலையில் அமித் ஷாவின் தமிழக பயணம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக கூறிய தமிழிசை சவுந்தரராஜ், இதில் அரசியல் காரணம் எதுவும் இல்லை என்று கூறினார். மேலும் அமித் ஷாவின் தமிழக வருகைக்கான மாற்று தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.