காங்கிரஸ் இல்லாத கர்நாடகத்தை உருவாக்க வேண்டும்- பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தொண்டர்களுக்கு அழைப்பு !

296

காங்கிரஸ் இல்லாத கர்நாடகத்தை உருவாக்க வேண்டும் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
கர்நாடக சட்டப் பேரவைக்கு வரும் 2018-ம் ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, கர்நாடக மாநிலத்தில் ஆட்சியைப் பிடிப்பதில் பாஜக தீவிர முனைப்புக் காட்டி வரும் பாஜக அதற்கானப் பணிகளை தற்போதே தொடங்கி விட்டது. இதையொட்டி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா 3 நாள் சுற்றுப் பயணமாக கர்நாடகா சென்றுள்ளார். விமானம் மூலம் அங்கு சென்ற அமித் ஷாவுக்கு பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது தொண்டர்களிடையே பேசிய அமித் ஷா, கர்நாடகா சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜகவை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டு வர கட்சித் தொண்டர்கள் அனைவரும் ராணுவ வீரர்களைப் போல் இரவு, பகல் பாராமல் உழைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். கர்நாடகாவில் ஊழல் நிறைந்த காங்கிரஸ் கட்சி ஆட்சி நடத்தி வருவதாகவும், அந்த ஆட்சியைத் தூக்கி எறிய மக்கள் காத்துக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, காங்கிரஸ் இல்லாத கர்நாடகத்தை உருவாக்க தொண்டர்கள் பாடுபட வேண்டும் என்றும் அமித் ஷா கேட்டுக் கொண்டார்.