அமர்நாத் யாத்திரை இன்றுடன் நிறைவடைகிறது.

334

ஜம்மு வழியாக பனிலிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் மேற்கொள்ளும் அமர்நாத் யாத்திரை இன்றுடன் நிறைவடைகிறது.
காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக் கோயிலில் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை மேற்கொள்வது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை கடந்த ஜூன் மாதம் 28-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில், இரண்டாயிரத்து 280 பக்தர்கள், மலையடிவாரத்தில் இருந்து அமர்நாத் ஆலயத்துக்கு புறப்பட்டு சென்றனர். 40 நாட்களாக நடைபெற்ற அமர்நாத் யாத்திரை இன்றுடன் முடிவடையும் நிலையில், இதுவரை சுமார் 2 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் பனிலிங்கத்தை தரிசித்துள்ளனர். தீவிரவாதிகள் தாக்குதல், விபத்து, உடல்நலக்குறைவு காரணமாக இதுவரை 40-க்கும் மேற்பட்ட பக்தர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.