அமித்ஷா தலைமையில் மாநில தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டம்..!

101

டெல்லி பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தலைமையில் அக்கட்சியின் மாநில தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. மக்களவைத் தேர்தலுக்குப் பின் முதன்முறையாக பாஜக தேசிய நிர்வாகிகள் மற்றும் மாநில தலைவர்கள் கூட்டம் டெல்லியில் கூடியது. முதற்கட்டமாக தேசிய
செயற்குழு கூட்டம் நடைபெற்ற நிலையில், மாநில தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கட்சியின் தேசிய தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா தலைமையேற்றார். இதில் தமிழகம், கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பாஜக தோல்வியடைந்தற்கான காரணம் பற்றியும் விவாதிக்கப்பட்டது. இனி வரவிருக்கும் தேர்தலை எதிர்கொள்வது, மாநிலங்களில் கட்சியை வலுப்படுத்துவது ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட்டது.