குஜராத்தில் பா.ஜ.க.வினர் நடத்திய பொதுகூட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் இரண்டு பேருந்துகளுக்கு தீவைக்கப்பட்டதால் பரபரப்பு.

277

குஜராத்தில் பா.ஜ.க.வினர் நடத்திய பொதுகூட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் இரண்டு பேருந்துகளுக்கு தீவைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குஜராத் மாநிலத்தில் சூரத் பகுதியில் பா.ஜ.க. யுவ மோர்சா அமைப்பின் மாநில தலைவர் ருத்விஜ் பட்டேல் தலைமையில் பொதுகூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தை எதிர்த்து மற்றொரு அமைப்பினர் ஊர்வலம் நடத்தினர். அப்போது, அப்பகுதியில் இருந்த பா.ஜ.க. யுவ மோர்சா அமைப்பினரின் விளம்பர பதாகைகள் கிழித்து சேதப்படுத்தப்பட்டது.இதையடுத்து இரு அமைப்பை சேர்ந்தவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். மேலும் அப்பகுதியில் சென்ற இரண்டு பேருந்துகளுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர். இதையடுத்து கலவரத்தில் ஈடுபட்டதாக 17 பேரை போலீசார் கைது செய்தனர்.