பா.ஜ.க. ஆட்சியில் நாட்டின் மதக்கலவரங்கள் அதிகரிப்பதாக புகார்.. முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் கருத்தால் சர்ச்சை

272

பா.ஜ.க. ஆட்சியில்தான் நாட்டில் வகுப்புக் கலவரங்கள் அதிகரித்து வருவதாக சிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளால், இந்தியாவுக்கு அச்சுறுத்தல் இல்லை என்று கூறினார். ஆனால் பாதுகாப்புக்கும், ஒருமைப்பாட்டுக்கும் இந்தியாவில் இருந்துதான் அச்சுறுத்தல் எழுந்துள்ளதாக அவர் குற்றம்சாட்டினார். தீவிரவாத அச்சுறுத்தல், சமூக வன்முறைகள் போன்றவை 2015ம் ஆண்டு முன்பு வரை படிபடிப்படியாக குறையத் தொடங்கியது. பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு, நாட்டில் வகுப்புக் கலவரங்கள், சமூக வன்முறைகள், உள்நாட்டு வன்முறைகள் அதிகரித்து வருவதாக சிவசங்கர் சுட்டிக்காட்டினார். இதற்கு காரணம், இந்தியாவின் அதிவேகப் பொருளாதார வளர்ச்சியும், அதனால் ஏற்பட்ட சமூக மாற்றங்களுமே என்றும் அவர் தெரிவித்தார்.