பாஜக எம்பி-க்கள் 25ஆம் தேதி டெல்லி வர வேண்டும் என உத்தரவு..!

221

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழுடன் பாஜக எம்பி-க்கள் 25ஆம் தேதி டெல்லி வரவேண்டும் என கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது.

மக்களவை தேர்தல் முடிவுகள் முழுமையாக அறிவிக்கப்பட்டவுடன், வெற்றி பாஜக எம்பி-க்கள் அதற்கான சான்றிதழ்களுடன் 25-ஆம் தேதி டெல்லி வருமாறு அழைக்கப்பட்டுள்ளனர். பின்னர், வருகிற சனி அல்லது ஞாயிற்றுக்கிழமை பாஜக எம்.பி.க்கள் கூட்டம் டெல்லியில் நடைபெறும் எனவும், இந்தக் கூட்டத்தில் பிரதமராக ஒருமனதுடன் மோடி தேர்வு செய்யப்படுவார் எனவும் தெரிய வந்துள்ளது. பின்னர்,. பாஜக எம்பி-க்கள் அனைவரும் கையெழுத்திட்ட கடிதத்துடன் மோடி ஜனாதிபதியை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர் ஜனாதிபதி அழைப்பு விடுத்தபின்னர், டெல்லியில் புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெறும் என கூறப்படுகிறது. அனேகமாக அடுத்த வாரம் பிரதமர் மோடி பதவியேற்பு விழா இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.