தலித் வீட்டுக்கு சென்று ஹோட்டல் உணவை சாப்பிட்ட பாஜக அமைச்சர்…!

1183

ஹோட்டல் உணவை சாப்பிட்டு விட்டு தலித் வீட்டில் சாப்பிட்டதாக விளம்பரம் தேடிக்கொள்ள முயன்ற உத்தர பிரதேச பாஜக அமைச்சரின் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக பல்வேறு பாஜக தலைவர்கள் தலித் வீடுகளுக்கு சென்று சாப்பிடுவது போல் செய்திகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் உத்தர பிரதேச மாநில பாஜக அமைச்சர் சுரேஷ் ரானா அலிகார் மாவட்டம், லோஹாகாத் கிராமத்தில் உள்ள ஒரு தலித் வீட்டுக்கு உணவு உண்பதற்காக சென்றுள்ளார். ஆனால், அவர் தலித் வீட்டில் சமைத்த உணவை உண்ணாமல், ஹோட்டலில் இருந்து சாப்பாட்டையும் தண்ணீர் பாட்டிலையும் வரவழைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த தலித் குடும்பத்தினர் அமைச்சர் விளம்பரம் தேடிக்கொள்வதற்காகவே வீட்டுக்கு வந்துள்ளதாகவும், தாங்கள் வழங்கிய உணவை உண்ணாமல் அமைச்சர் தங்களை அவமானப்படுத்திவிட்டதாக வேதனையுடன் கூறியுள்ளனர்.