பாஜகவின் 2 நாட்கள் தேசிய செயற்குழு கூட்டம் : அமித்ஷா குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்

607

டெல்லியில் பாஜகவின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் இன்று தொடங்கி, நடைபெற்று வருகிறது.

டெல்லியில் உள்ள அம்பேதகர் சர்வதேச மையத்தில் 2 நாள்கள் நடைபெறும் பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டத்தை அக்கட்சியின் தலைவர் அமித் ஷா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். பிரதமர் மோடி, அத்வானி, அருண்ஜெட்லி உட்பட பாஜக ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர், துணை முதலமைச்சர்கள் மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். தமிழக பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் இந்த கூட்டத்தில் பங்கேற்றார்.
கூட்டத்தில் அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு, திருத்தப்பட்ட எஸ்சி.எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம், நாடாளுமன்றத்துக்கும் அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது, பெட்ரோல் விலை உயர்வு ஆகிய பிரச்சினைகள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.

மேலும், அடுத்து நடைபெற உள்ள 4 மாநில தேர்தல்களில் பாஜக வெற்றி வியூகம் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதுதவிர, நாளைமறுநாள், காங்கிரஸ் நடத்த உள்ள நாடு தழுவிய முழுஅடைப்பு போராட்டத்தை எதிர்கொள்வது குறித்தும், விவாதிக்கப்பட்டது, இந்த நிலையில், முதல் நாள் கூட்டத்தில் அமித்ஷா உரையாற்றுவார் என்றும், நாளை நிறைவுநாளில் பிரதமர் மோடி பேசுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.