இடைக்கால சபாநாயகராக பா.ஜ.க, எம்.பி., வீரேந்திர குமார்..!

158

17 வது லோக்சபாவின் இடைக்கால சபாநாயகராக பா.ஜ.க, எம்.பி., வீரேந்திர குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அவர், புதிய எம்.பி.,க்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

மத்தியில் இரண்டாவது முறை ஆட்சி அமைத்துள்ள, பிரதமர் மோடி தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி அரசின், முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர், வரும் 17 ஆம் தேதி துவங்குகிறது. முதல் இரண்டு நாட்களில், மக்களவையில், புதிய, எம்.பி.,க்கள் பொறுப்பேற்றுக் கொள்வர். 19 ஆம் தேதி சபாநாயகர் தேர்வு நடைபெற உள்ளது. அதன் மறுநாள், நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டத்தில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுவார். அடுத்த மாதம், 26 வரை தொடர்ந்து நடைபெற உள்ள இந்த தொடரில், ஜூலை மாதம் 5 ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், மக்களவையின், இடைக்கால சபாநாயகராக பா.ஜ.க, எம்.பி., வீரேந்திர குமார் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர், மத்திய பிரதேச மாநிலம் திகம்ஹர் தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்டவர். புதிய எம்.பி.,க்களுக்கு அவர் பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.