தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் விலகியுள்ள நிலையில், மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது..!

758

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் விலகியுள்ள நிலையில், மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததால் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். இதைத்தொடர்ந்து, தேசிய ஜனநாயக கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சி விலகியுள்ளது. இந்த அதிர்ச்சியில் இருந்து பாஜக மீள்வதற்குள், மத்திய அரசுக்கு எதிராக ஒஎய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இதற்கு தெலுங்கு தேசம் கட்சி ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், காங்கிரஸ், இடதுசாரிகளும் ஆதரவு அளிக்க முன்வந்துள்ளன. 19ம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், வேறு சில கட்சிகளும் ஆதரவு அளிக்கும் என்று தெரிகிறது. நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு அளிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தநிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன், அதிமுகவில் எந்த குழப்பமும் இல்லை என்று கூறினார்.நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து அதிமுக உயர்மட்டக் குழு முடிவு எடுக்கும் என்று, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.