பாஜக-வுடன் கைகோர்க்க தயார்-நடிகர் கமல்ஹாசன்

436

நிர்வாக ரீதியாக தமிழகத்துக்கு தேவைப்படும் பட்சத்தில் பாரதிய ஜனதா கட்சியுடன் கைகோர்க்க தயாராக உள்ளதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து தமிழக அரசின் செயல்பாடுகளை விமர்சித்து வருகிறார்.

மக்களுக்கு சேவை செய்வதற்காக அரசியலில் களமிறங்க உள்ளதாக தெரிவித்த கமல்,

தன் கட்சியின் நிறம் நிச்சயம் காவியாக இருக்காது என்பதை திடகாத்திரமாக தெரிவித்தார்.

இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், அரசியலில் தீண்டாமை இல்லை எனக்கூறியுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சி, தனது வலதுசாரி கொள்கைகளை ஒதுக்கி விட்டு, குறைந்த பட்ச செயல்திட்டம் உருவாக்குமானால் அக்கட்சியுடன் தொடர்பு வைத்து கொள்வதில் எந்த தயக்கமும் இல்லை என்று கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

மேலும் தனது கட்சிக்கான சின்னம், கொடி ஆகியவற்றை இறுதி செய்யும் பணிகளில் ஈடுபட்டிருப்பதாக கூறிய கமல், இந்தாண்டு இறுதிக்குள் கட்சி தொடங்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் தேர்தலில் போட்சியிட்டு சட்டரீதியாக பொறுப்பேற்கும் பட்சத்தில் தனது நடிப்புத் தொழிலை துறக்க முடிவு செய்துள்ளதாகவும், நிதானமாக யோசித்தே அரசியலுக்கு வரும் முடிவை எடுத்துள்ளதாகவும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.