குஜராத் பாஜக முன்னாள் எம்பிக்கு ஆயுள் தண்டனை..!

113

தகவல் உரிமைச்சட்டப் போராளி அமித் ஜெத்வா கொலை வழக்கில் குஜராத்தைச் சேர்ந்த பாஜக முன்னாள் எம்பி சோலங்கிக்கு ஆயுள் தண்டனை விதித்து சி பிஐ நீதி மன்றம் தீர்ப்பளித்து உத்தரவிட்டது.

குஜராத் மாநிலம் கிர் வனப்பகுதியில் சட்டவிரோத சுரங்கம் அமைப்பதாக பாஜக மக்களவை முன்னாள் உறுப்பினர் டினு சோலங்கி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டை சோலங்கி மறுத்துவந்தார். இந்நிலையில் தகவல் உரிமை பெறும் சட்டத்தின் கீழ் அமித் ஜெத்வா என்பவர் கிர் வனப்பகுதிக்குள் சோலங்கி சட்ட விரோதமாக சுரங்கம் அமைத்துத் தொழில்புரிவதாக தகவலை பெற்றார். இதுகுறித்து ஊடகங்களுக்கும் அவர் பேட்டியளித்தார். இதனால் ஆத்திரமடைந்த சோலங்கி எம்பியும் அவரது தொண்டர்களும் தகவல் உரிமைப்போராளி அமித் ஜெட்வாவை கொடூரமாக கொலை செய்தனர், இதுதொடர்பான வழக்கை நடத்தி வந்த சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அதில் பாஜக எம் பி சோலங்கி உள்பட அனைத்துக்குற்றவாளிகளுக்கும் ஆயுள்தண்டனையும், 59 லட்சத்து 25 ரூபாய் அபராதத் தொகையும் கட்ட வேண்டும் என நீதிபதி கே எம் தேவ் உத்தரவிட்டார்.