பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று அல்லது நாளை வெளியாகும் – தமிழிசை சௌந்தரராஜன்

117

தமிழகத்தில் பாஜக போட்டியிடும் 5தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இன்று அல்லது நாளை வெளியிடப்படும் எனத் தமிழிசை தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்லியில் பாஜக மத்தியத் தேர்தல் குழுக் கூட்டத்துக்குத் தமிழகத்தில் பாஜக வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புவோரின் பட்டியலைக் கொண்டுசெல்வதாகத் தெரிவித்தார். மத்தியத் தேர்தல் குழுக் கூட்டத்துக்குப் பின் இன்று அல்லது நாளை வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.