பா.ஜ.க. ஆட்சியில் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுகின்றன – தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ.நெடுமாறன்

317

மோடி ஆட்சியில் ஜனநாயக உரிமைகள் அடியோடு பறிக்கப்படுவதாக தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ.நெடுமாறன் குற்றம் சாட்டியுள்ளார்.

திருவண்ணாமலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியாவின் பல்வேறு துறைகளில் புகழ்பெற்ற 5 பேரை பொய்யான குற்றச்சாட்டின் பேரில் மத்திய அரசு கைது செய்துள்ளது கண்டனத்திற்குரியது என்று கூறினார்.மேலும் திருச்சி முக்கொம்பு மேலணையின் மதகுகள் இடிந்து விழுந்ததற்கு மணல் கொள்ளை தான் காரணம் என்றும், நீர் மேலாண்மையில் தமிழக அரசு முழுமையாக தோல்வி அடைந்து விட்டதாகவும் பழ.நெடுமாறன் குற்றம் சாட்டினார்.