2 நாட்கள் நடைபெறும் பாஜக தேசிய கவுன்சில் கூட்டம் இன்று தொடக்கம்..!

111

டெல்லியில் 2 நாட்கள் நடைபெறும் பாஜக தேசிய கவுன்சில் கூட்டம் இன்று தொடங்குகிறது.

டெல்லியில் இன்று தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறும் பாஜக தேசியக் கவுன்சில் கூட்டத்தை அக்கட்சியின் தேசியத்தலைவர் அமித்ஷா தொடங்கி வைக்கிறார். இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி நாளை நிறைவுரையாற்றுகிறார். இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் நலத் திட்டங்கள், ஏழைகள் நலத் திட்டங்கள் குறித்தும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.

வரும் மக்களவை தேர்தலில் அதிக தொகுதிகளில் பாஜக வெற்றி பெறுவதற்கான வியூகம் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. தேர்தல் தோல்வியால் துவண்டிருந்த பாஜகவுக்கு, இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பது புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. கூட்டத்தின் முடிவில், மக்களவை பொதுத் தேர்தலை சந்திப்பது தொடர்பான திட்டத்தை கட்சி வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.