நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தே.மு.தி.க தனித்து போட்டியிடும் – விஜயகாந்த்

323

2019 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தே.மு.தி.க தனித்து போட்டியிடும் என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாளை யொட்டி அக்கட்சி அலுவலகத்தில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த், துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்ட ஏழை, எளியோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். அப்போது விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் , 2019 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க தனித்து போட்டியிடும் என அறிவித்துள்ளார்.

அனைத்து தொகுதிகளிலும் தே.மு.தி.க வெற்றி பெற்று மக்கள் பணியாற்ற வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். அமெரிக்கா சென்ற போது, தனது உடல் நிலை சீராக பிரார்த்தனை செய்த அனைத்து உள்ளங்களுக்கும் விஜயகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். இதனிடையே கூட்டத்தில் உரையாற்றிய பிரேமலதா, விஜயகாந்தின் உடல்நிலை குறித்து கண்ணீருடன் உருக்கமாக பேசினார்.