ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா போல, இந்தியாவும் நட்புக்கரம் நீட்டும் – ராணுவத் தளபதி பிபின் ராவத்

1700

தீவிரவாதத்தை ஊக்குவிப்பதை பாகிஸ்தான் நிறுத்திக் கொண்டால், ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா போல, இந்தியாவும் நட்புக்கரம் நீட்டும் என்று ராணுவத் தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்.அவருக்கு பதக்கம் வழங்கப்பட்டபோது, வெண்கலம் வென்று மூன்றாம் இடம் பிடித்த பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமுடன் கைகுலுக்கிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில், டெல்லியில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் பிபின் ராவத் பங்கேற்றுப் பேசினார். அவரிடம் இந்திய-பாகிஸ்தான்

neeraj_chopra1எல்லையிலும் “ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்” வெளிப்படுத்தப்படுமா என கேட்கப்பட்டது. தீவிரவாதத்தை நிறுத்துவதன் மூலம் பாகிஸ்தான் நாடுதான் முதல் அடியை எடுத்து வைக்க வேண்டும் என்று கூறிய பிபின் ராவத், அவர்கள் தீவிரவாதத்தை நிறுத்தினால் நாமும் நீரஜ் சோப்ரா போல நடந்துகொள்வோம் என தெரிவித்தார்.