கேரளாவில் சிறுவாணி அணையின் குறுக்கே அட்டப்பாடியில் கட்டப்படும் அணை குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

226

கேரளாவில் சிறுவாணி அணையின் குறுக்கே அட்டப்பாடியில் கட்டப்படும் அணை குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
நதிநீர் ஒப்பந்ததை மீறி சிறுவாணி ஆற்றின் குறுக்கே அட்டப்பாடியில் அணை கட்ட, கேரள அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு, மற்றும் பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் கோயில் யாத்திரைக்காக, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சென்னை வந்தார் விமான நிலையத்தில் அவரை சந்தித்த செய்தியாளர்கள், அட்டப்பாடி அணை குறித்து கேள்வி எழுப்பினர். கோயில் யாத்திரைக்கு வந்துள்ளதாக கூறிய அவர், அணை விவகாரம் குறித்து தற்போது எதுவும் சொல்ல முடியாது எனத் தெரிவித்து பதிலளிக்க மறுத்துவிட்டார்.