மாட்டிறைச்சிக்கான தடையை கேரளா ஏற்காது : கேரளா முதலமைச்சர் பினராய் விஜயன்

315

மாட்டிறைச்சிக்கான தடையை கேரளா ஏற்காது என்று அம்மாநில முதலமைச்சர் பினராய் விஜயன், பிரதமர் மோடியிடம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், மத்திய அரசின் புதிய விதிமுறைகளால் இறைச்சிக் கூடங்களின் வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.
அரசியலமைப்புச் சட்டத்தின் படி மதச்சார்பின்மை, கூட்டாட்சி முறைக்கு எதிரானது என்றும் பினராய் விஜயன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மாட்டிறைச்சிக்கு தடை விதித்திருப்பது, ஏழை மக்களுக்கு கிடைக்கும் ஊட்டச்சத்தை கிடைக்காமல் செய்யும் நடவடிக்கை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மாட்டிறைச்சி தொடர்பான மத்திய அரசின் புதிய விதிகள் மாநில உரிமைகளில் தலையிடும் வகையில் உள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
கேரள அரசு இதனை ஏற்காது என்றும், மத்திய அரசு உடனடியாக இந்த முடிவை திரும்ப பெற வேண்டும் என்றும் பினராய் விஜயன் வலியுறுத்தியுள்ளார்.