உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து காவிரியில் கர்நாடக அரசு திறந்து விட்ட நீரானது தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை அடைந்துள்ளது.

248

உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து காவிரியில் கர்நாடக அரசு திறந்து விட்ட நீரானது தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை அடைந்துள்ளது.
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, செப்டம்பர் 6ம் தேதி காவிரி ஆற்றில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட்டது. இதற்கு அம்மாநில விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரி நீர், இன்று காலை தமிழக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவை வந்தடைந்துள்ளது. இந்த நீர் இன்று மாலை மேட்டூர் அணைக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, காவிரி ஆற்றில் வரும் தண்ணீரின் அளவு குறித்து தமிழக பொதுப் பணித் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி உறுதி செய்ய உள்ளனர்.