ஒடிசாவில் பைக் ஆம்புலன்ஸ் சேவை இன்றுமுதல் துவங்கியுள்ளது..!

355

ஒடிசாவில் பைக் ஆம்புலன்ஸ் சேவை இன்றுமுதல் துவங்கியுள்ளது.
ஒடிசா உள்ளிட்ட வட மாநிலங்களில் விபத்து உள்ளிட்ட ஆபத்து காலங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் தட்டுப்பாடு இருப்பதால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழப்பு சம்பவங்கள் அதிகமாக நடந்து வருகின்றன. இந்த நிலையில், உயிரிழப்பை தடுக்கும் நோக்கிலும் ஏழை மக்கள் பயன்பெறும் வகையிலும் ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டத்தில் பைக் ஆம்புலன்ஸ் உருவாக்கப்பட்டது. அதன் சேவை இன்றுமுதல் துவங்குகிறது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.